சனி, 23 அக்டோபர், 2010


இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.’ என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. அவ்விதம் ஈடு கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலிலும் நிறைந்திருக்கிறது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி வரும் இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  1. கல்வியும் கற்காமல், எந்தவித கைத்தொழிலும் தெரியாமல் எந்த வேலைக்கும் தயார் என்று வேலைத் தேடுபவர்கள்.
  2. இன்றைய தேவைக்குகந்ததை கல்லாத பட்டதாரியாக, பணி அனுபவமில்லாமல் சரியான ஆங்கில உரையாடல் தெரியாமல் திணறிக் கொண்டு முடிந்தவரை படிப்புக்கு தகுந்த வேலையைத் தேடி கிடைக்காமல் அலுத்துப் போய் எந்த வேலைக்கும் தயார் என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்பவர்கள்.
இரண்டாவது வகையை சார்ந்தவர்களைப் பார்த்து ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற கல்லாத உள்ளங்கள் கற்ற இளம் சகோதரர்களின் நிலை உயர்ந்தாக வேண்டும், தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றவர்களின் எதிர் காலம் உன்னதமானதாக விளங்க அவர்கள் சரியாக தயாராக வேண்டும் என்கிற ஆவலுடன் அதற்கான தீர்வுகளையும், வழிக்காட்டுதல்களையும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் வழங்க வேண்டும் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இளம் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இன்றைய நவீன உலகிற்கு மிகவும் தேவையானவற்றைக் கற்பதில்லை. பொதுவாகவே ஆங்கில உரையாடலில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றார்கள் என்பதுதான் எல்லோராலும் அக்கறையுடன் சுட்டிக்காட்டப் படுகின்ற உண்மை நிலை.
இன்றைய அதிவேக உலகம் கற்பனைக்குதிரையின் வேக ஓட்டத்திற்கேற்ப கடலைத் தூர்த்து கனவு நகரங்களைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது.
முன்னேறும் நாடுகள் பலவற்றிலும் கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு ஊரின் மக்கள் தொகையையை ஓரிரு கட்டிடங்களில் நிரப்புகின்ற வகையில் அழகியக் கலைநுட்பத்துடன் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன புதுப்புதுக் கட்டிடங்கள்.
பல்லாயிரக் கணக்கான வல்லுநர்கள் குழுவாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இன்னமும் வேலைவாய்ப்பு சந்தையில் வாய்ப்புகள் ஏராளம். சம்பளம் மற்றும் சகல வசதிகளும் தாராளம்.
ஆம். இன்றைய இளம் மாணவர்கள் எதைப் படிக்கலாம் என்று கேட்டால் ‘கட்டிடக்கலைப் பொறியியல்’ என்றுதான் எங்கும் விடை கிடைக்கின்றது.
இந்தியா உள்பட எல்லா நாடுகளிலுமே இந்த கல்விக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
(இன்ஷா அல்லாஹ்,மேலும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்விகளைப் பற்றி தொடர்ந்து வெளியிடுவோம்.)
இன்னும் ஆங்கில உரையாடல் குறைப்பாட்டை எப்படி நீக்குவது?
இன்றைக்கு ஆங்கில உரையாடல் பயிற்சிக்கு அநேக வழிமுறைகள் அறிமுகப் படுத்தப் பட்டாலும் பெரும்பாலும் ஆங்கில மொழியின் இயல்பான நடையிலிருந்து மாறி நமது மொழியின் இயல்பு நடையை அப்படியே மொழிப் பெயர்த்து பேசுவதாகத்தான் அவை அமைகின்றன.
இந்த குறைபாடுதான் நாம் ஆங்கிலத்தில் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.
சிறந்த வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளை அறிந்து பயிற்சி பெற ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களை படிக்கத் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அர்த்தங்களைப் புரிந்துக் கொண்டு பயிற்சி பெற்று பேசத் துவங்கும் போது நமது இளம் மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் சுற்றியுள்ளவர்களை, ஏன் அவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
காலத்தை வீணாக்காமல் அதற்கான முயற்சியை இன்றே, இப்போதே துவக்க வேண்டும்.
சமுதாயம் என்னும் ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகளாய் மாணவர்கள் உறுதியுடன் வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

குழந்தைகளை அடிக்காதீர்கள்.
“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” – என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” – இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? – இது தந்தை.
தம்பி தயங்கியபடியே – அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”


“திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?” – என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!
“இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?” என்று அனுப்பி வைக்கிறார்.
இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன?
இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது – என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!
மாறாக – அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் “அடிக்கக் கூடாது” என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப் படும்போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப் படும்போது நாமும் அடிக்கலாம் தானே – இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!நாம் ஒரு செயலை குழந்தையிடம் எதிர்பார்க்கும் போது – அக்க்குழந்தை அதே செயலை அனைவரும் செய்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்கிறது.

சான்றுக்கு – நாம் சிறுவர்களை தொழச் சொன்னால் அப்பா தொழுகிறாரா, அம்மா தொழுகிறாரா, ஆசிரியர் தொழுகிறாரா – என்று ஒருவர் விடாமல் பார்க்கும். எல்லாரும் கடைப் பிடித்தால் தாமும் செய்யத் தொடங்கும். இல்லையேல் குழந்தை அதனை ஏற்காது.
குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!
”உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” (முஸ்லிம்)

ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள “அனுமதி” உள்ளது. அவ்வளவு தான்.
அண்ணல் நபியவகள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா? நபியவர்கள் எவரையும் கை நீட்டி அடித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார்.
அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ண்லார் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!”
எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.

அடிக்கவில்லை என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?
குழந்தைகள் பொதுவாக பல சமயங்களில் நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். பொய் சொல்வார்கள். க்ண்ட இடத்தில் பொருள்களைப் போட்டு வைப்பார்கள். சுத்தமாக இருக்க மாட்டார்கள், நேரம் கழித்து வீட்டுக்கு வருவார்கள். வீட்டு வேலை ஒன்றை செய்யச் சொன்னால் மாட்டேன் என்பார்கள். இது போன்ற குழந்தைகளைத் திருத்துவது எப்படி?
ஒரு முறை:
அடித்துத் திருத்த நினைப்பது. அதற்கு சொல்லப் படும் “பொன்மொழிகள்” :
- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!
- அடியாத மாடு படியாது!
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!
- அடி உதவுவது போல் அண்ண்ன் தம்பி உதவ மாட்டான்!

இந்த முறையினால் ஏற்படும் விளைவுகள்:
- கட்டுப் படுவார்கள் குழந்தைகள் – பய உண்ர்ச்சியினால் – அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!

- ஆனால் சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் – அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இன்னொரு முறை – மென்மையான முறை – சுன்னத்தான முறை:
- அன்பு செலுத்தி (Love and Compassion)
- அக்கரை காட்டி (Taking Care)
- மரியாதை கொடுத்து (Respect)
- நம்பிக்கையூட்டி (Trust)
வழி காட்டினால் – கட்டுப் படுவார்கள் – ஆனால் அது மன மாற்றத்தினால்! இது தற்காலிகம் அன்று!

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: நாம் மேலே சொன்னபடி குழந்தைகள் நம் “சொல்லை” கவனிப்பதில்லை. மாறாக நமது “செயலை”த் தான் கவனிக்கிறது என்பதனை மற்ந்திடக் கூடாது.
குழந்தைகள் உடனடியாக தங்களைத் திருத்திக் கொண்டு விடுவார்கள் என்று நாம் எதிபார்த்திடக் கூடாது. மெதுவாகத் தான் மாறுவார்கள். அதுவரை பொறுமை தேவை.
குழந்தைகளிடம் தனியே உட்கார்ந்து பேசிட வேண்டும். அவர்களிடம் பேசிட வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்திட வேண்டும். அதைச் செய் இதைச் செய்யாதே என்று உத்த்ரவுகள் போடக் கூடாது. அது ஒரு கலந்துரையாடலாக அமைந்திட வேண்டும். கேள்விகள் கேட்டு அவர்களிடம் பதில்களை வரவழைத்திட வேண்டும். அவர்களை சிந்திக்க விட வேண்டும். அவர்களின் தவறுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை (Consequences) அவர்களுக்கு சுட்டிக் காட்டிட வேண்டும். அவர்களின் அறிவுக்குப் படுகின்ற மாதிரியும் அவர்களின் உள்ள்த்தைத் தொடுகின்ற வகையிலும் நமது பேச்சு அமைந்திட வேண்டும். அதில் அவர்கள் மீது நமக்கு இருக்கின்ற கருணையும் அக்கரையும் வெளிப் பட வேண்டும்.
இந்த முறையில் தான் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் படிப்படியாக!
பின் வரும் நபி மொழி நாம் அடிக்கடி கேள்விப் பட்டது தானே.
“குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவனும் நம்மைச் சேர்ந்தவன் இல்லை!” (அஹ்மத்)

குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா?
குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற “தண்டனைகள்” குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை வ்ன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே – குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். நம்மிடம் மென்மை இல்லாவிட்டால் நமது குழந்தைகள் நம்மிடமிருந்து வெருண்டோடத் தான் செய்வார்கள்!

பின் வரும் ஒரு இறை வசனமே இதற்குச் சான்று:
”(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளின் காரணமாகவே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லாம் உம்மிடமிருந்து வெருண்டோடி இருப்பார்கள்.” (குர் ஆன் 3:159)

இத்த்னைக்குப் பிறகும் மென்மையான அன்பான அக்கரையான முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?
- குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்.
- தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்.
இவர்கள் தாம்.


ஞாயிறு, 4 ஜூலை, 2010

கல்விச்செல்வம்


விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.
மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!
மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?
சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள  அல்குரான் அழைக்கிறது!